இளையான்குடி | மனைவி பெயர் இடம்பெறாததால் கல்வெட்டை நொறுக்கிய அதிமுக கவுன்சிலரின் கணவர்

அதிமுக பிரமுகர் செல்வராஜ் சேதப்படுத்திய கல்வெட்டு.
அதிமுக பிரமுகர் செல்வராஜ் சேதப்படுத்திய கல்வெட்டு.
Updated on
1 min read

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி அருகே தொடக்கப் பள்ளி சமையலறை கட்டிடத் திறப்பு விழா கல்வெட்டில் மாவட்ட கவுன்சிலரான தனது மனைவியின் பெயர் இல்லாத ஆத்திரத்தில் கல்வெட்டை அதிமுக பிரமுகர் அடித்து நொறுக்கினார்.

இளையான்குடி அருகே விஜயன்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.6 லட்சத்தில் சமையலறை கட்டப் பட்டது. இக்கட்டிடத்தை நேற்று மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி திறக்க இருந்தார். இதற்காக கட்டிடத்தில் கல்வெட்டு வைக் கப்பட்டது. ஆனால் கல்வெட்டில் அப்பகுதி மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி பெயர் இடம்பெறவில்லை.

விழா தொடங்குவதற்கு முன்பாக அங்கு வந்த மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ் கல்வெட்டை அடித்து நொறுக் கினார். மேலும் தனது மனைவி பெயர் இடம்பெறாதது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சில மணி நேரம் தாமதமாக கட்டிடத்தை எம்எல்ஏ தமிழரசி திறந்து வைத்தார்.

கல்வெட்டு சேதம் குறித்து ஊராட்சித் தலைவர் மாரி லோகராஜ் புகாரின் பேரில் இளை யான்குடி போலீஸார் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in