

சென்னை: திருச்சியில் காவல் நிலையத்தில் திமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலுக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு, திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் நேருவின் காரை வழி மறித்தனர்.
தொடர்ந்து இரு தரப்பினரும் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்துக்குச் சென்றபோது, அங்கும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழ கத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், காவல் நிலையத்துக்கு உள்ளேயே புகுந்து திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாஎன்று சந்தேகம் எழுகிறது.
ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் திமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும், தமிழகத்துக்கு அச்சுறுத்தலும், பொது அமைதிக்கு ஆபத்தும் இருப்பதாகபொதுமக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். காவல் துறையை தன்பொறுப்பில் வைத்துள்ள முதல்வர்,இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திருச்சி மோதல் சம்பவம் அதிர்ச்சிஅளிக்கிறது. கையில் ஆயுதங்களுடன் வந்தவர்களைத் தடுக்காமல், அங்கிருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்துள்ளதுவன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திருச்சி சிவாவின் ஆதரவாளர் களை காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்கியதுடன், ஆளுங் கட்சியினர் என்ற அதிகாரத்துடன், அங்கு பணியில் இருந்த பெண் காவலரையும் திமுகவினர் கடுமை யாகத் தாக்கி, பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளது, தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன்: திமுகஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆவதற்கு முன்பே, அக்கட்சியின் உட்கட்சிப் பூசலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுகவினர் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக் கிறது.
ரவுடிகளைப் போல திமுகவினர்காவல் நிலையத்தில் புகுந்து, பெண் காவலரைத் தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது. திமுகவினரின் இந்த செயல்வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணத்தை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இவ்வாறு அறிக்கைகளில் கூறி யுள்ளனர்.