Published : 04 Sep 2017 09:06 AM
Last Updated : 04 Sep 2017 09:06 AM

கூடங்குளம் முதல் அணு உலையில் 910 மெகாவாட் மின் உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறனுள்ள 2 அணு மின் உலைகள் செயல்படுகின்றன. முதலாவது அணு உலையில் எரிபொருளாக யுரேனியம் ஆக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது. இங்கு, 7 ஆயிரம் மணி நேரம் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மாற்றி, புதிதாக எரிபொருள் நிரப்பும் பணி ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கியது. இதனால் இந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவடைந்து, கடந்த 29-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 910 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x