

சென்னை: அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது தானியங்கி கேமரா மூலம் விரைவில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்துக்காக சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறுதொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து செயல் திட்டங்களை நவீனப்படுத்த சென்னையில் உள்ள சிக்னல்களில் ரூ. 4 கோடியே 21 லட்சத்து99 ஆயிரத்து 230 செலவில் 6 வேகக்காட்சி பலகைகள், 45 பல்நோக்குசெய்தி பலகைகள், 139 எல்இடி பொருத்தப்பட்ட போக்குவரத்து காவல் நிழற்குடைகள் மற்றும் 170 ரிமோட் கன்ட்ரோல் சிக்னல்கள் ஆகிய 4 நவீன தொழில்நுட்ப வசதிகளின் இயக்கம் நேற்று தொடங்்கி வைக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே, இந்ததொழில்நுட்ப வசதிகளை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்து பேசியதாவது: சென்னை காவல் துறையை நவீனப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு திட்டமாகதான் ஸ்பென்சர்சிக்னல் அருகே ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல் தொடங்கப்பட்டுள்ளது.
அவசர வேளைகளில், சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது, சிக்னலைமாற்ற வேண்டும் என்றால் அதன்அருகில் போக்குவரத்து போலீஸார் இருக்க வேண்டும்.
இதனால் பல்வேறு சிரமங்கள் இருந்தன. தற்போது இந்த தொழில்நுட்பத்தால் போக்குவரத்து போலீஸார் ரிமோட் மூலம் சிக்னலை மாற்றமுடியும்.
இதுதவிர சாலைகளில் கார், பைக்ஆகியவை அதிவேகமாக சென்றால்,அவர்களுக்கு அபராதம் விதிக்க,வேகத்தை அளவிடும் கருவியின்திரையை 6 இடங்களில் வைத்திருக்கிறோம். வரும் காலத்தில் அதிகதிறன் கொண்ட கண்காணிப்புக் கேமரா வைத்து அதை திரையில்இணைத்து, அதிவேகத்துடன் செல்லும் வாகனங்கள் மீது தானியங்கி முறையில் விரைவில் அபராதம் விதிக்க உள்ளோம். கோடைக் காலம் தொடங்கியதால் போக்குவரத்து போலீஸாருக்கு ஒரு நாளுக்கு 2 வேளை மோர் வழங்கப்படும்.
வரும் காலத்தில் நிறைய திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ட்ரோன் வர உள்ளது. திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கவும் புதிய திட்டங்கள் வரப்போகிறது. இவ்வாறு காவல் ஆணையர் கூறினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர்மயில்வாகனன், உதவி ஆணையர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.