திருச்சியில் காவல் நிலையத்துக்குள் திமுகவினர் தாக்குதல்: ஸ்டாலின் பதில் என்ன? - வீடியோவுடன் இபிஎஸ் கேள்வி

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், திருச்சி ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீடு மற்றும் செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காட்சிகளின் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அதில் காவல் நிலையத்துக்குள் நுழைய முயற்சிக்கும் திமுகவினரை ஒரு பெண் காவலர் தடுக்க முயல்வதும், அவர் மீது நாற்காலி வீசி தாக்கப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு, எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மே லும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட நேருவின் ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முழு விவரம் > அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி; திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் - திருச்சியில் பரபரப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in