

தருமபுரியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவர சன். காதல் கலப்பு திருமண விவ காரத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார். இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (4-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாள் நிகழ்ச்சியில் வெளியூரைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்றால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால் மாவட்டம் முழுவதும் வருகிற 10ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து சுமார் ஆயிரம் காவலர் கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தடையை மீறி இளவரசனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் தலைவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ள தாகத் தெரிகிறது.
நினைவு நாள் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திரு மாவளவன் பங்கேற்க உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அவ்வாறு தடை மீறி வரும் தலை வர்கள், அமைப்புகளின் நிர்வாகி களை மாவட்ட எல்லையில் காவல்துறையினர் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.