

சென்னை: பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாளை (மார்ச் 16) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பூந்தமல்லி நகராட்சி நகரமன்ற தேர்தல்நடைபெற்று ஓராண்டு முடிந்தபோதும் இதுவரை மக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை பணிகளும் நடைபெறாமல் இருக்கிறது. நகராட்சித் துறைகளில் அதிகாரிகள் இல்லாத அவலநிலையால், அத்தியாவசிய பணிகளும் முடிக்கப்படாமல் தேங்கியுள்ளன.
இத்தகைய நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டைக் கண்டித்து முன்னாள் நகரமன்ற உறுப்பினர் து.கந்தன் தலைமையில் குமணன்சாவடியில் நாளை மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.