மருத்துவ கல்வி இயக்குநராக டாக்டர் சாந்திமலர் நியமனம்

ஆர்.சாந்திமலர்
ஆர்.சாந்திமலர்
Updated on
1 min read

சென்னை: மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக டாக்டர் ஆர்.சாந்திமலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) ஆயிஷா சாகீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குநராக (டிஎம்இ) இருந்த டாக்டர் நாராயணபாபு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாகவும், டிஎம்இ கூடுதல் இயக்குநராகவும் இருந்த டாக்டர் ஆர்.சாந்திமலர் டிஎம்இ இயக்குநராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், டிஎம்இ இயக்குநராக ஆர்.சந்திமலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சுகாதாரத் துறைச் செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

அதேபோல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக (பொறுப்பு) மருத்துவர் ஆயிஷா சாகீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் பொறுப்பு இயக்குநராக திறம்பட பணியாற்றி வந்த சாந்திமலர், முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மருத்துவர்கள், முதுநிலை, இளநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களின் நலன்களையும் பாதுகாத்து பொதுமக்களுக்கு உரிய மருத்துவச் சேவை வழங்குவதிலும் அவர் சமரசம் இன்றி செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in