Published : 15 Mar 2023 06:36 AM
Last Updated : 15 Mar 2023 06:36 AM

நாமக்கல் | ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நாமக்கல்: மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப்பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட வருமானச் சான்று பெற வேண்டும். இருப்பிடச் சான்று அல்லது ரேஷன் கார்டு, பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து 6 மாத கால பயிற்சி சான்று, வயது சான்று, வயது 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆவணங்களுடன் நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இன்று மாலைக்குள் (15-ம் தேதி) வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண் 234 முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் - 637003 என்ற முகவரியில் வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x