

சென்னை: சென்னையில் தமிழக அரசைக் கண்டித்து, அனுமதியின்றி போராட்டம் முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பட்டியல் சமூக மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியைதமிழக அரசு பயன்படுத்துவதில்லை என்று புகார் தெரிவித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் தமிழக பாஜக பட்டியல் அணி சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் சிலைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்ததிட்டமிடப்பட்டிருந்தது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் நடத்த பாஜகவினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், போலீஸார் அனுமதிக்கவில்லை.
எனினும், பாஜக பட்டியல் அணிமாநிலத் தலைவர் தடா பெரியசாமி தலைமையிலான கட்சியினர் நேற்று, தடையை மீறி அம்பேத்கர் சிலை முன் போராட்டத்தில் ஈடுபடமுற்பட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
அண்ணாமலை கண்டனம்: இதற்கிடையில், பாஜகவினர் கைது செய்யப்பட்டதுக்கு மாநிலத்தலைவர் அண்ணாமலை ட்விட்டர்மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியல் சமூக மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு மத்திய அரசுஒதுக்கும் நிதியை முறையாகச்செலவிடாமல், வேறு திட்டங்களுக்கு திமுக அரசு மடைமாற்றி வருகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.