Published : 14 Mar 2023 06:10 AM
Last Updated : 14 Mar 2023 06:10 AM

திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும்: திருமாவளவனுக்கு ஹெச்.ராஜா அறிவுரை

மதுரை: பட்டியலின மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் திமுக கூட்டணியை விட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியேற வேண்டும் என பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டார்.

மதுரையில் நேற்று அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு பட்டியலின மக்களின் நலனுக்காக, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.10,446 கோடியை செலவு செய்யாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. சமூக நீதியின் பாது காவலர்கள் என தங்களை கூறிக்கொண்டு, பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.

இதனால் தமிழக அரசை அம்பேத்கர் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்பதற்காக, அவரது சிலையிடம் மனு அளித்தோம். பட்டியலின மக்களுக்கு துரோகம் விளை விக்கும் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் இன்னும் ஏன் இருக்கிறார்? வெளியேறி விடலாமே?

பட்டியலின மக்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் வேங்கைவயல் சம்பவத்துக்காக ஏன் அவர் போராடவில்லை.? திருமாவளவனுக்கு பட்டியலின மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முரசொலி கட்டிடம் தொடங்கி, தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க பாஜக அறை கூவல் விடுக் கிறது. இதை திருமாவளவன் ஆதரிப்பாரா?

இதற்காக பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க திருமாவளவனை நேரடியாக அழைக் கிறோம். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேசாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் பேசாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x