அதிமுகவில் இணைந்தார் அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர்

அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி
அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி
Updated on
1 min read

சென்னை: அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (மார்ச்12) அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச்.13) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கடம்பூர் ராஜூ உடன் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in