

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார்.
கர்நாடக சட்டப் பேரவைதேர்தலுக்கான இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனால்ஓரிரு நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிகளை செய்வதற்காக அவர் பெங்களூரு சென்றிருந்தார்.
அங்கு தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகளில் தீவிரமாகஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஓய்வின்றி கட்சி பணிகளில் ஈடுபட்டதால் அண்ணாமலைக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் பெங்களூருவில் சிகிச்சை பெற்றுஅவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
இதற்கிடையில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை நேற்றுபங்கேற்பதாக இருந்தது. காய்ச்சல் காரணமாக பங்கேற்காததால் அந்த நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. ஓய்வில் இருக்கும் அண்ணாமலை, ஓரிரு நாளில் சென்னை திரும்புவார் என பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.