தாம்பரம் | குப்பையில் கிடந்த வைர நகை மீட்டு தந்த தூய்மைப் பணியாளர்கள்

தாம்பரம் | குப்பையில் கிடந்த வைர நகை மீட்டு தந்த தூய்மைப் பணியாளர்கள்

Published on

செம்பாக்கம்: தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்ததவர் ஜானகி. நேற்று காலை வீட்டை சுத்தப்படுத்தி குப்பையை வாகனத்தில் கொட்டிவிட்டு சென்றார்.

பின்னர் காதில் அணிந்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடு மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சந்தேகத்தின் பேரில் குப்பை வாகனத்தை நிறுத்தி பணியாளர் கார்மேகம் என்பவரிடம் விவரத்தை தெரிவித்தார்.

இதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் குப்பையை கிளறி தேடினர். ஒரு மணி நேரம் தேடிய பின் கிடந்த வைர தோடை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். சிரத்தை எடுத்து தேடி உரியவரிடம் தோடை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in