Published : 11 Mar 2023 06:39 AM
Last Updated : 11 Mar 2023 06:39 AM
கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 11) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்துவிமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர், சின்னியம்பாளையத்தில் மாற்றுக் கட்சியினர் 6 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.
அவருடன் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் தங்கும்முதல்வர், மாலை 4 மணிக்குகருமத்தம்பட்டியில் நெசவாளர்கள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT