கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் என்ஐஏ விசாரணை

கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் என்ஐஏ விசாரணை
Updated on
1 min read

கோவை: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தஆண்டு அக்டோபர் மாதம் 23-ம்தேதி கார் சிலிண்டர் வெடித்ததில், ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக, ஐஎஸ் ஆதரவான ‘வாய்ஸ் ஆஃப் கொரசான்’ பத்திரிகை சார்பில், டார்க் வெப்சைட்டில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் அனுமதி பெற்றனர்.

இதையடுத்து, 5 பேரையும் நேற்று காலை கோவை காவலர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள தற்காலிக என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டனர்.மேலும், கோட்டைமேடு, உக்கடம்உள்ளிட்ட பகுதிகளுக்கும், சதித் திட்டம் தீட்டிய சத்தியமங்கலம் வனப் பகுதி, குன்னூருக்கும் அவர்களை அழைத்துச் சென்று, விசாரணை நடத்தவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in