

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அம்மாநில தொழிலாளர் துறை செயலரை தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து ஆலோசிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் விபத்துக்குள்ளான கட்டிடத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.