தமிழகம்
சென்னை | ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூ. கட்சி இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ரகுநாதன் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பியுள்ளார்.
சட்டப்பேரவையின் இறையாண்மையை தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வடசென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு அருகே இன்று (மார்ச் 11) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதைகட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தொடங்கி வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
