Published : 11 Mar 2023 06:45 AM
Last Updated : 11 Mar 2023 06:45 AM
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியின் (எம்எம்சி) கீழ் செயல்படும் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1983-ம்ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்த செவிலியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளராகவும், அரசுசெவிலியர் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றும் 35 செவிலியர்கள் பங்கேற்று நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது, தங்களுக்குப் பாடம் கற்பித்த 3 ஆசிரியைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் எம்.பிரேமகுமாரி கூறியதாவது: சென்னை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1983-ம்ஆண்டு மார்ச் 10-ம் தேதி முதல் 1986-ம் ஆண்டு வரை டிப்ளமோ நர்சிங் படிப்பை 100 பேர் படித்தோம்.
அதில், தற்போது 40 பேர்வாட்ஸ்-அப் குரூப்பில் தொடர்பில் இருக்கிறோம். அதில், 30 பேர்இன்று நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோம் ஒருவருக்கொருவர் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டோம். 80 வயதைக் கடந்த 3 ஆசிரியைகளை அழைத்து வந்து கவுரவப்படுத்தினோம்.
ஆசிரியைகளும் எங்களை கவுரவித்தனர். குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு அனைவரும் சென்றோம். இந்த நாள் எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் ஆகும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT