

கோவை: இருவேறு நிகழ்ச்சிகளில் பஙகேற் பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 11) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
பீளமேடு விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள், ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், கட்சியினர் வரவேற்கின்றனர். அதைத் தொடர்ந்து காரில் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்குக்கு முதல்வர் செல்கிறார். அங்கு மாற்றுக் கட்சியினர் 6 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்கிறார்.
விழாவில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். அதன் பின்னர், ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று மு.க.ஸ்டாலின் தங்குகிறார்.
மாலை 5 மணிக்கு கருமத்தம்பட்டியில் விசைத்தறி, கைத்தறி யாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார். இரவு 8 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.