

மாணவி அனிதா தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான திவ்யதர்ஷினி, "ஒரு பெண்ணின் கனவை பாதுகாக்கத் தவறிவிட்டோம்" என தெரிவித்துள்ளர்.
உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் திவ்யதர்ஷினி தனது ட்விட்டர் பக்கத்தில், "திவ்யதர்ஷினி - அனிதா, உனக்கு இது நேர்ந்திருக்கக் கூடாது. நீ படித்த அனைத்து புத்தகங்களும் அதிக மதிப்பெண்கள் எடுக்க சொல்லிக் கொடுத்தன. அவை ஏன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தை உனக்கு சொல்லித் தரவில்லை. பல வழிகளில் ஒரு தேசமாக நாம் தோல்வியடைந்துவிட்டோம். நம் அமைப்பு தோல்வியடைந்துள்ளது. ஒரு பெண்ணின் கனவை பாதுகாக்கத் தவறிவிட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.