

தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் கீழடி அகழாய்வு குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. சுப.வீரபாண்டியன் இந்த கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்தார்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ''தோழர் சுப.வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்ச்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்'' என்று ட்வீட் செய்துள்ளார்.
கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது கவனிக்கத்தக்கது.
கமல் ட்வீட்: