ஆர்.என்.ரவி | கோப்புப் படம்
தமிழகம்
ஹோலி எல்லோர் வாழ்விலும் ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: ஹோலி எல்லோர் வாழ்விலும் ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநர் ரவி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீமையை நன்மை வென்றதை குறிக்கும் இந்த வண்ணமய திருவிழா எல்லோர் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்" இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
