

சென்னை: வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் ஹோலி பண்டிகையில் தமிழர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும் இடையேயான பிணைப்பும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.
வட மாநில மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி. ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மகிழ்ச்சி, அன்பை வெளிப்படுத்தும் விதமாக வண்ணமயமான ஹோலி பண்டிகை கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் பன்முகத் தன்மையை வலியுறுத்தும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் மகிழ்வான தருணத்தில் தமிழர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும் இடையேயான பிணைப்பும், சகோதரத்துவமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்." என்று தினகரன் கூறியுள்ளார்.