ராகிங் தடுப்பு: கல்லூரிகளுக்கு அரசு புதிய உத்தரவு

ராகிங் தடுப்பு: கல்லூரிகளுக்கு அரசு புதிய உத்தரவு
Updated on
1 min read

கல்வி நிறுவனங்களில் ராகிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து கல்லூரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராகிங் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்புமாறு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளுக் கும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவு பிறப் பித்துள்ளது.

அந்த அறிக்கையில், ராகிங் தடுப்பு குழு விவரம், பதிவான ராகிங் சம்பவங்களின் எண் ணிக்கை, முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) விவரம், ராகிங் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட உறுதிமொழி, ராகிங்கில் ஈடுபட்டால் அளிக்கப் படும் தண்டனை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் உட்பட 10 அம்சங்களை தெரிவிக்குமாறு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in