

சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வியாழக்கிழமை பதிலளித்தார். அப்போது அவர், ‘‘பசுமைக் கட்டிடங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், நடைமுறைகள் குறித்து ரூ.5 கோடியில் ஆய்வு மேற்கொண்டு பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்க தகுந்த நடைமுறைகள் உருவாக்கப்படும்’’ என்றார்.