பாஜகவில் இருந்து விலகிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார் 

அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணன்
அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணன்
Updated on
1 min read

சென்னை: பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்ந்து, அதன் மாநில செயலாளர் திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தார்.

தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணனும், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று (பிப்.6) அறிவித்தார். இந்நிலையில், அவரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (பிப்.7) அதிமுகவில் இணைந்தார். அப்போது, சிடிஆர் நிர்மல்குமாரும் உடன் இருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in