Published : 07 Mar 2023 06:07 AM
Last Updated : 07 Mar 2023 06:07 AM

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு: அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ்போட்டித் தேர்வு பிரிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை10 மணிக்கு நடைபெறும் விழாவில்இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போட்டித் தேர்வுப் பிரிவை தொடங்கி வைக்க உள்ளார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசு தேர்வுகளான எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழகம்முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படும். இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழகஇளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும்.

இந்த தொடக்க விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் உதயச்சந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, இளைஞர்களுக்கு ஊக்க உரை அளிக்க ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x