

சேலம்: வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில், அரசு சார்பில் உள் நுழைவு அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலத்தில் அரசு சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் இரண்டு பேர், சேலம் மணியனூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரியில், வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இறுதி ஆண்டு மாணவர்கள் பரத் ராம் , ராஜேஷ் ஆகிய இரு மாணவர்கள் மட்டும் போராட்டத்தை மேற்கொண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கல்லூரிக்கு வெளியே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.