Published : 06 Mar 2023 06:04 AM
Last Updated : 06 Mar 2023 06:04 AM
வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன.
நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு வேலூர் வனக்கோட்டத்தில் 40 இடங்களில் நடைபெற்றது. இக்கணக்கெடுப்பு பணியை வன ஊழியர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து மேற்கொண்டனர்.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் நீர்பரப்பில் வாழும் பறவைகள், நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், நீர்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 28, 29-ம் தேதிகளில் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து, மாநில அளவில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்டன.
வேலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 20 இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் இக்கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு இடங்களில் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த தலா ஒரு பறவைகள் ஆர்வலர்கள், சுமார் 3 வன ஊழியர்கள் என 40 இடங்களிலும் சேர்த்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர்.
அப்போது, காப்புக்காடு, ஊர்புறங்களில் காணும் பறவைகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்தும், வீடியோவாக பதிவு செய்தும் கணக்கிட்டனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை இப்பணிகள் நடைபெற்றன.
இதன் முடிவை வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், அரிய வகை பறவைகள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தென்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
அதேபோல, திருப்பத்தூர் வனச் சரகம் சார்பில் ஆம்பூர் அருகே நிலப் பரப்பில் பறவைகள் கணக் கெடுப்பு பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. காப்புக்காடு பகுதியிலும் நிலப்பகுதியிலும் வனத்துறையினர், பறவையின ஆர்வலர்களால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.
ஆம்பூர் வனச்சரகத்தில் பனங் காட்டேரி, ஊட்டல் காப்புக்காடு பகுதிகளில் இரண்டு குழுவினரும், நிலப்பகுதி கணக்கெடுப்பு பெரியாங்குப்பம் வயல் வெளிப் பகுதியிலும், பெத்லகேம் பகுதியிலும் பறவைகள் கணக் கெடுப்பு நடத்தப்பட்டன.
காலை 6 மணி முதல் 10 மணி வரை இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமை யில் வனவர்கள் சம்பத், முருகன், செல்வகுமார், சுரேஷ், வனக்காப்பாளர்கள் சௌந்தர் ராஜன், செந்தில், பால்ராஜ், ராஜ்குமார், வனக்காவலர்கள் சிவராமன், கோகுல் உள்ளிட் டோரும் பறவைகள் ஆர்வலர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT