மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு 6 அடி உயர ‘பேனா’ - திமுகவினர் அளித்த பிரம்மாண்ட பரிசு

முதல்வருக்கு பேனாவை வழங்கிய மதுரை திமுகவினர்
முதல்வருக்கு பேனாவை வழங்கிய மதுரை திமுகவினர்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் 6 அடி உயர பிரமாண்ட ‘பேனா’ பரிசளித்தனர்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 5) காலை மதுரை வந்தார். அவருக்கு மதுரை விமானநிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதில், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சக்கரபாண்டியன், பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 6 அடி உயர ‘பேனா’ பரிசளித்தனர். தற்போது சென்னையில் மெரீனா காடலில் ரூ.81 கோடிக்கு தமிழக அரசு 134 அடி உயரத்திற்கு பேனா சிலை அமைக்க உள்ளது. கடலில் பேனா சிலை அமைக்கக்கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது திமுகவினர், நிகழ்ச்சிகளில் ‘பேனா’ பரிசளித்து கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இன்று மதுரை வந்த முதல்வருக்கும் திமுகவினர் 6 அடி உயர பிரமாண்ட பேனாவை பரிசளித்தனர். மதுரை விமானநிலையம் முதல் நிகழ்ச்சி நடந்த ஆட்சியர் அலுவலகம் வரை திமுகவினரும் பொதுமக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்து அவரை நெகிழச்சியடையச் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in