பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார்

பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார்
Updated on
1 min read

பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்த சிடிஆர்.நிர்மல்குமார் அக்கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக நிர்மல்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலமுறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாகவும், நேர்மையாகவும் கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர், “#420 மலையாக இருக்கும் நபரால், தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகிய நிர்மல்குமார் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in