Published : 08 Sep 2017 08:31 AM
Last Updated : 08 Sep 2017 08:31 AM

போக்குவரத்து சேமநல ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

போக்குவரத்து சேமநல ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் தொழில்நுட்ப பிரிவு என 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. 2016 ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் 12-வது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் தினக்கூலி, சேமநல ஊழியர்கள் என சுமார் 17 ஆயிரம் பேருக்கு தினமும் ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இதுவரையில் போக்குவரத்து கழக சேமநல ஊழியர்களுக்கு தினமும் ரூ.335 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேமநல ஊழியர்களின் சம்பளத்தை ரூ.429 என உயர்த்தி வழங்க நேற்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x