வட மாநில தொழிலாளர்களின் இன்றைய நிலைக்கு திமுகவே காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை | கோப்புப்படம்
அண்ணாமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "வட இந்தியர்களைப் பற்றி திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துகள், அவர்களை பானிபூரி வாலா என்று திமுக அமைச்சர் அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் வட இந்தியர்களை வெளியேற்றக் கோருவதும்தான் இன்றைய இந்த நிலைக்குத் தூண்டியுள்ளது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழ் மக்களாகிய நாங்கள், "உலகம் ஒன்று" என்ற கருத்தை நம்புகிறவர்கள். நம் வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் வெறுப்பையும் ஆதரிக்கவில்லை.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு தங்கள் தொழில் சார்ந்த
அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் என்பது குறித்தும், மற்றும் அவர்களின் நலனை உறுதிப்படுத்த அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி அறிக்கை ஒன்றை ஏற்கெனவே வெளியிட்டுள்ளனர்.

உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் துறையில் புலம்பெயர்ந்த நமது சகோதர, சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். ஆனாலும், வட இந்தியர்களைப் பற்றி திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துகள், அவர்களை பானிபூரி வாலா என்று திமுக அமைச்சர் அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் வட இந்தியர்களை வெளியேற்றக் கோருவதும்தான் இன்றைய இந்த நிலைக்குத் தூண்டியுள்ளது.

திமுக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய கருத்துகளை தமிழக மக்களும், அரசும், காவல்துறையும் ஏற்றுக்கொள்து இல்லை.முன்பு திமுக செய்த வினையே இத்தகைய நிலைக்குக் காரணம். எனவே, தற்போதைய நிலையை சரிசெய்வது அவர்களின் பொறுப்பாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற திமுகவின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இதுவொரு வாய்ப்பாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் விவரம் > வட மாநில தொழிலாள தோழர்கள் அச்சம் அடைய வேண்டாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in