தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவு
Updated on
1 min read

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆக.22-ம் தேதி முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர்.

பேரவை கட்சி முடிவுகளை மீறியதாக, அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவரிடம் பரிந்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, 19 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு முதலில் விளக்கம் அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், பின்னர் விரிவான விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரி கடந்த 5-ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து சபாநாயகர், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வரும் 14-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in