தைராய்டு கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மியாட் மருத்துவமனையில் ரேடியோ அதிர்வலை சிகிச்சை

மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சேலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர்  காயத்திரியுடன், மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் மற்றும் மருத்துவர் கார்த்திகேயன் தாமோதரன்.
மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சேலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் காயத்திரியுடன், மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் மற்றும் மருத்துவர் கார்த்திகேயன் தாமோதரன்.
Updated on
1 min read

சென்னை: சென்னை மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் கூறியதாவது: சேலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் காயத்ரிக்கு (41) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கழுத்துப் பகுதியில் சிறிய கட்டி உருவானது.

நாளடைவில் அது பெரிதானதால், அவர் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குஅவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தைராய்டு கட்டி உருவாகியுள்ளதாகவும், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்றும் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சையால் நிரந்தத் தழும்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குரல்வளை பாதிப்பு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட எதிர்விளைவுகளும் ஏற்படக்கூடும். இந்நிலையில், மியாட் மருத்துவமனையில் ரேடியோ அதிர்வலை முறையில் (ரேடியோ ஃப்ரீக்வன்ஸி அப்லேசன்) கட்டியை நீக்கும் சிகிச்சை உள்ளதையறிந்து, இங்கு வந்தார்.

மருத்துவமனையின் ரத்த நாளம் மற்றும் இடையீட்டு கதிரியக்க சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன் தாமோதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர்.

அதன்படி, கட்டி இருந்த பகுதியில் சிறிய துளை மூலம் ரேடியோ அதிர்வலைகளைப் பயன்படுத்தி கட்டி நீக்கப்பட்டது. சில நாட்களில் கழுத்துப் பகுதியில் வீக்கம் குறைந்து, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். தைராய்டு கட்டி நீக்கத்துக்கு, இத்தகைய நவீன சிகிச்சை அளிப்பது தமிழகத்திலேயே இதுவே முதல்முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in