பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்
Updated on
1 min read

பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் படுகாயம் அடைந்த ஸ்டாலின் ஜேக்கப், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்டாலினுடன் பயணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ஸ்டாலின் ஜேக்கப் பிரபல புகைப்பட கலைஞர் மட்டுமல்ல, ஆன்லைனில் பிரபலமான what a karwad என்ற உணவு நிறுவனத்தையும் நடத்திவந்தவர். நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்டாலின், பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில்தான் கொடூர விபத்தில் சிக்கி காலமாகியுள்ளார்

இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in