ஈரோடு இடைத்தேர்தல் | ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெற்ற 13 வேட்பாளர்கள்

வாக்கு எண்ணப்பட்டதன் காட்சி
வாக்கு எண்ணப்பட்டதன் காட்சி
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்கள் ஒற்றை இலக்க வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் 2 பேர் 3 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். இந்த தேர்வு முடிவு குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்:

  • கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்றார்.
  • தற்போது ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • காங்கிரஸ் வேட்பாளர் 64.60 சதவீத வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 25.80 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10,827 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாமிடம் பெற்றார்.
  • தேமுதிக வேட்பாளர் 1,432 வாக்குகள் மட்டுமே பெற்று நான்காம் இடம் பெற்றார்.
  • நோட்டா 798 வாக்குகள் பெற்று ஐந்தாமிடம் பெற்றுள்ளது.
  • 13 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்க வாக்குகளை பெற்றுள்ளனர்.
  • 2 சுயேட்சை வேட்பாளர்கள் 3 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளனர்.
  • ஆறுமுகம், கீர்த்தனா, தீபன் சக்கரவர்த்தி, முகமது அலி ஜின்னா, முத்துபாவா உள்ளிட்ட 5 சுயேட்சை வேட்பாளர்கள் 3 இலக்கத்தில் வாக்குகளை பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in