

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவு குறித்து வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்ற கதையாக அதிமுக இன்று இருக்கும் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர்காய்வதால் பெற்ற வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது.
பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம்ஒன்றுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
எனவே, மக்களின் விருப்பத்துக்கிணங்க ஒட்டுமொத்த கழக தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான,ஒருங்கிணைந்த அதிமுகவை அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். எனவே, இந்த தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல்,நம்பிக் கையோடு இருங்கள். இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.