

கோவை: கோவை வழியாக இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் வரும் 5-ம் தேதி மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், எர்ணாகுளம் - டாடா நகர் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 18190) 5ம் தேதி காலை 7.15 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுவதற்கு பதில், மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 10.45 மணிக்கு புறப்பட்டு வரும்.
ஆலப்புழா - தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 13352), ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படுவதற்குப் பதில், 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு புறப்பட்டு வரும். திருநெல்வேலி - பிலாஸ்பூர் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22620), திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு புறப்படுவதற்கு பதில், 2 மணி நேரம் தாமதமாக அதிகாலை 3.25 மணிக்கு புறப்பட்டு வரும்.
கேஎஸ்ஆர் பெங்களூரு - கோவை இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் (எண்: 22665) கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படுவதற்குப் பதில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு வரும். கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12244),
பிற்பகல் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு செல்வதற்குப் பதில் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.