

செங்கல்பட்டை அடுத்துள்ள அஞ்சூர் கிராமத்தின் அடர்ந்த வனப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த தானியங்கி கேமராவில் சிறுத்தைப்புலி நடமாட்டம் பதி வாகியுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வல்லம், ஒழலூர், பழவேலி, வேதநாராயணபுரம், இருங்குன்றபள்ளி ஆகிய கிராமப் பகுதிகளில் கடந்த 3 மாதங் களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றி வருகிறது. அதைப் பிடிப்ப தற்காக வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். சிறுத் தைப்புலியைப் பிடிக்க முதுமலை, பொள்ளாச்சி, முண்டந் துறை, களக்காடு பகுதிகளில் இருந்து சிறப்பு வன அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் ஆலோசனையின்பேரில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக வனப்பகுதி களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது. ஆனால், இவற்றில் சிறுத்தை உருவம் பதிவாகாமல் இருந்தது. இதனால் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், மகேந்திரா சிட்டியை அடுத்துள்ள அஞ்சூர் கிராமப் பகுதியில் அமைந் துள்ள வனப் பகுதியில் சில நாட்க ளாக சிறுத்தைப்புலியைப் பார்த்த தாக பொதுமக்கள் சிலர் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சிறுத்தைப் புலியைப் பிடிக்க கூண்டு வைத்தி ருந்தனர். தற்போது, அஞ்சூர் வனப் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தானியங்கி கேமராவில் சிறுத்தைப்புலியானது நடந்து செல்லும் காட்சிகள் புகைப்படமாக பதிவாகியிருப்பதால், வனப் பகுதியில் சிறுத்தைப்புலி இருப் பது வெள்ளிக்கிழமை ஆதாரபூர்வ மாக உறுதியானது.
இதுகுறித்து, செங்கல்பட்டு வனத்துறை அதிகாரி கோபு கூறிய தாவது: “வனப்பகுதியில் அமைத்திருந்த கேமராவில் சிறுத் தைப்புலி நடமாட்டம் பதிவாகி யுள்ளதா என வெள்ளிக்கிழமை சோதனை செய்தபோது, 13-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வனப் பகுதியில் சிறுத் தைப்புலி நடந்து செல்லும் புகைப்படங்கள் பதிவாகி இருந்தன. வனப் பகுதியில் சுற்றித் திரிவது 8 வயதுடைய ஆண் சிறுத்தை என உறுதி செய்துள்ளோம். இதைத் தொடர்ந்து, வனப்பகுதி மற்றும் அதன் அருகே சாலைகளில் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் தனியாக சாலையில் நடந்து செல்ல வேண்டாம் என, கிராம மக்களுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். சிறுத்தைப்புலியைப் பிடிக்க வனப் பகுதியில் ஏற்கெனவே கூண்டுகள் அமைக் கப்பட்டுள்ளன. அதைப் பிடிப் பதற்கான நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் மேற் கொள்ளப்பட்டுவருகின்றன. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், வனப் பகுதி அருகே உள்ள கிராம மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை” என்றார்.