திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் புதிய நியாய விலைக் கடை திறப்பு

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் புதிய நியாய விலைக் கடையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஸ், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை உலகப்ப தெருவில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.21.44 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைக்கான கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடம், திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கட்டிடத்தின் புதிய நியாயவிலைக் கடையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், புதிய குடும்ப அட்டைகளும் வழங்கினார்.

இந்த நியாயவிலைக் கடைக்கு தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 687 அரிசி, 26 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஷ், தயாநிதிமாறன் எம்.பி. உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in