Published : 02 Mar 2023 07:00 AM
Last Updated : 02 Mar 2023 07:00 AM

வீட்டுவசதி வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணியாற்றி பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 53 இளநிலை உதவியாளர்கள், 3 தொழில்நுட்ப உதவியாளர்கள், ஒரு தட்டச்சர், 2 ஓட்டுநர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் வழங்கினார்.

மேலும், 14 இளநிலை வரைவு அலுவலர்களுக்குவரைவு அலுவலர்களாகவும், ஒரு கண்காணிப்பாளருக்கு உதவி வருவாய் அலுவலராகவும், 3 உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர்களாகவும் பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை செயலர் அபூர்வா, வாரிய மேலாண் இயக்குநர் சரவண வேல்ராஜ், வாரிய செயலாளர் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x