முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை பேனா வழங்கி கொண்டாடிய மதுரை அரசு வழக்கறிஞர்கள்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை பேனா வழங்கி கொண்டாடிய மதுரை அரசு வழக்கறிஞர்கள்
Updated on
1 min read

மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை மதுரையில் அரசு வழக்கறிஞர்கள் பேனா மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது நாள் பிறந்த நாள் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. உயர் நீதிமன்ற கிளையின் பிரதான வாயில் அருகே வழக்கறிஞர்கள், பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகம், பேனா மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

இதில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு பிளீடர் திலக்குமார், அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி மற்றும் அரசு வழக்கறிஞர்கள், திமுக வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி, மாவட்ட அரசு பிளீடர் எழிலரசன் ஆகியோர் தலைமையில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி வழக்கறிஞர்கள், பொதுமக்களுக்கு, பேனா மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in