Last Updated : 01 Mar, 2023 03:03 AM

 

Published : 01 Mar 2023 03:03 AM
Last Updated : 01 Mar 2023 03:03 AM

தமிழ் பெயர் பலகை விவகாரம் | நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு - அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கின் விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்கை விசாரித்தனர்.

அப்போது, அரசுத் தரப்பில், அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்கென உள்ளது. 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது என கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், "ரூ.50 அபராதம் 1948ல் கொண்டு வரப்பட்டது. தற்போதைய நிலைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். அபராதம் செலுத்திவிட்டு பெயர் பலகையில் மாற்றம் செய்வதில்லை" எனக் கூறினர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், "அபராதம் போதுமானதல்ல, தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது. அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து இதில் ஈடுபடுவோர்மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x