மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்று கடைசி நாள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பு
Updated on
1 min read

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்று (பிப்ரவரி 28) கடைசி நாள் ஆகும்.

மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின்நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவ. 15-ம் தேதி தொடங்கியது.

இதற்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. முதலில், டிச.31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. பலரும் ஆதாரை இணைக்காததால், ஜன.31, பிப்.15 என அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் பிப்.28-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த கெடு இன்றுடன் முடிகிறது. இதற்குமேல் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in