

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களிலிருந்து முதல் போக பாசனத்திற்காக 12.7.2014 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.