

முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிபியிடம் தடா ரகீம் புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா அப்துல்ரகீம். இவர் டிஜிபி ராமானுஜத்தை திங்கள்கிழமை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், “அம்பத்தூரில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நெல்லை, பழனி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக சேவை செய்து வந்த மண்ணடி அப்துல்லாவையும் விசாரணை என்ற பெயரில் போலீஸார் அழைத்துச் சென்று கைது செய்துள்ளனர். எந்த காரணமும் இல்லாமல் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதைக் கண்டிக்கிறோம். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.