Published : 28 Feb 2023 07:17 AM
Last Updated : 28 Feb 2023 07:17 AM

நாளை சென்னை வரும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க அழைப்பு

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மார்ச் 1-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக அவர் சென்னைக்கு வரும் அவருக்கு. 1-ம் தேதி பகல் 12 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில பிரம்மாண்ட வரவேற்பு வழங்க வேண்டும் என சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களையும், கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x