‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் - ‘வாக்கரூ’ இணைந்து நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்பராயன், மாவட்ட எஸ்.பி. சுதாகர் ஆகியோர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்பராயன், மாவட்ட எஸ்.பி. சுதாகர் ஆகியோர்.
Updated on
1 min read

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரூ’ இணைந்து பள்ளி மாணவர்களுக்காக நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

குழந்தைகள் மத்தியில் நடைப்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி அவர்களை தினமும் நடக்கப் பழக்கப்படுத்தும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வாக்கரூ இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ எனும் பள்ளிக் குழந்தைகளுக்கான நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் போட்டிகளை நடத்துகின்றன.

இப்போட்டிகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 3,4,5-ம்வகுப்பு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல் போட்டியும், 6,7,8-ம்வகுப்புகளுக்கு ஜூனியர் கட்டுரைப் போட்டியாக `நடைப் பயிற்சியின் நன்மைகள்' எனும்தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது. மேலும், 9 முதல்12-ம் வகுப்பு வரை சீனியர் கட்டுரைப் போட்டி `நம் வாழ்க்கை முறைகளில் நடையின் பங்கும் பயனும்' எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா மாவட்டஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி தலைமை வகித்துவெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இவ்விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்புராயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in